கராத்தே கிட் திரை விமர்சனம்

கராத்தே கிட் திரை விமர்சனம்


பல வருடமாக பல வெர்ஷனில் வெளிவந்த கராத்தே கிட், இந்த முறை ஜோனதன் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ரால்பே இருவரும் இணைக்கும் ஒரு யுனிவர்ஸாக வெளிவந்துள்ள இந்த கராத்தே கிட், எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

லீ என்ற டீன் ஏஜ் பையன் ஜாக்கி ஜானிடம் குங்பூ கற்றுக்கொள்கிறான். ஆனால் அவன் குங்பூ கற்றுக்கொள்வது அவன் அம்மாக்கு பிடிக்கவில்லை, ஏனெனில் இந்த சண்டையால் தான் லீ அவன் அண்ணனை இழந்தான்.

அதனால் அவன் அம்மா லீ-யை அமெரிக்கா அழைத்து வர, அங்கு லீ-க்கு தன் வயதுள்ள ஒரு பெண்ணிடம் நட்பு கிடைக்கிறது, அவளின் தந்தை ஒரு கிக் பாக்ஸிங் சாம்பியனாக இருந்தவர்.

Karate Kid: Legends

லீ சண்டை போடுவதை பார்த்து, லீ-யை தனக்கு குங்பூ சொல்லி கொடுக்க சொல்கிறார் லீ-யின் கேர்ள் ப்ரண்ட் தந்தை, அவரும் நன்றாக ட்ரெயின் ஆகி மீண்டும் பாக்ஸிங் போக அங்கு அவருக்கு ஏற்பட்ட அடியால் கோமா நிலைக்கு செல்ல, இந்த சண்டையால் தான் எல்லாம் என அனைத்தையும் ஒதுக்குகிறார்.

ஆனால், லீ-ன் கேர்ள் ப்ரண்ட் பழைய காதலன் மூலம் இந்த சண்டை போடும் நிலை லீ-க்கு வர, பிறகு என்ன ஜாக்கிஜான், ரால்பே உதவியுடன் லீ எப்படி வென்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கடந்த முறை ஒரு அமெரிக்கா பையன் சீனா செல்லும் போது அங்கு ஒரு சீனா பையனுடன் மோதுவது போல் கதை, இது அதனுடைய ரிவர்ஸ், சீனா பையன் அமெரிக்கா வந்து அமெரிக்கா பையனிடம் மோதுவது போல் கதை.

கதையின் நாயகனாக பென் வாங், லீ என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், ஜாக்கி ஜான், ரால்பே எல்லாம் எதோ கெஸ்ட் ரோல் போல் தான் வந்து செல்கின்றனர்.

தன் கேர்ள் ப்ரண்ட் முன்னாள் காதலனை ஒரு பெரிய டோர்னமெண்டில் தோற்கடிக்க வேண்டும், அதற்காக ஜாக்கி ஜான், ரால்பே, பென் வாங்-யை தயார் படுத்தும் காட்சிகள் எல்லாம் செம்ம, அட பாவம் அந்த லீ-யை விட்டு விடுங்கள் என்ற அளவிற்கு பெண்ட் கலட்டுகின்றனர்.

ஆனால், ஜேடன் ஸ்மித் நடித்த கராத்த கிட்-ல் ஒரு எமோஷ்னல் படம் முழுவதுமே இருக்கும், கண்டிப்பாக இந்த பையன் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கே இருக்கும்.

ஆனால், இதில் பென் வாங் ஏற்கனவே குங்பூ தெரிந்தவர் என்பதால் எப்படியும் ஜெயித்து விடுவார் என்ற எண்ணம் வர எமோஷ்னல் எதுவும் ஆடியன்ஸிடம் கனேக்ட் ஆகவில்லை.

ஜாக்கி ஜான், ரால்பே ரசிகர்களுக்கும் இவ்ளோ தானா இவுங்க ரோல் என்று நினைத்தாலும், இந்த கதையில் இதற்கு மேல் இவர்களுக்கு வேலையும் இல்லை தான்.

டெக்னிக்கல் விஷயத்தில் படத்தின் இசை, மேற்கத்திய பாடல்கள் இன்றைய ட்ரெண்ட் கிட்ஸுகாகவே போடப்பட்டது உள்ளது. சண்டை காட்சிகள் பிரமாதம் என்றாலும் பல ஜும் காட்சிகள் நமக்கு சரியாக சண்டை காட்சியை காட்டவில்லையோ என்ற உணர்வை கொடுக்கிறது.

க்ளாப்ஸ்

பென் வாங் மற்றும் அனைத்தும் நடிகர்கள், நடிகைகள் நடிப்பு.  

கிளைமேக்ஸ் ஸ்டெண்ட். குறிப்பாக ஜாக்கி, ரால்பே பென் வாங்-கு கொடுக்கும் ட்ரெயினிங்.

கராத்தே கிட் திரை விமர்சனம் | Karate Kid Legends Movie Review

பல்ப்ஸ்

பெரிதாக எமோஷ்னல் கனேக்ட் ஆகவில்லை.

மொத்தத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சென்றால், போர் அடிக்காத ஒரு டீசண்ட் ஆக்‌ஷன் படம் ஆக இருக்கும் இந்த கராத்தே கிட் லிஜண்ட்ஸ்.

2.75/5
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *