"ராம் அப்துல்லா ஆண்டனி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

"ராம் அப்துல்லா ஆண்டனி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


சென்னை,

அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜெயவேல் இயக்கியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். கானா பாடல்கள் அவரது அடையாளமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலில் நடனமாடி அறிமுகமானார். மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கூடுதல் பிரபலமானார். மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதற்குப் பிறகு மகாராஜா, அந்தகன் படத்திலும் நடித்திருந்தார்.

சூப்பர் சிங்கர் பூவையார் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பூவையார், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாகவும் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *