தர்ஷன் நடித்துள்ள “சரண்டர்” படத்தின் டீசர் வெளியானது

சென்னை,
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் காவல் துறை அதிகாரியாக ‘சரண்டர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
விக்டர் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கவுதமன் கணபதி இயக்கி இருக்கிறார். இவர் அறிவழகனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தினை அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படம் தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.