‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க திரிப்தி டிம்ரிக்கு இத்தனை கோடி சம்பளமா?

சென்னை,
‘அர்ஜுன் ரெட்டி, அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென்று அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனால் அவருக்கு பதில் அனிமல் பட புகழ் நடிகை திரிப்தி டிம்ரி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். படத்தில் பிரபாசுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளாராம். ஒரு பாடலில் ‘பிகினி’ அணியவும் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம்.
இந்த நிலையில், ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள திரிப்தி டிம்ரியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க அவருக்கு சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகை திரிப்தி டிம்ரி ஒரு சில படங்களே நடித்திருந்தாலும், ‘அனிமல்’ படத்துக்கு பிறகு திரிப்தி டிம்ரியின் மார்க்கெட் எகிறி போய்விட்டது. அதனால் தான் ஸ்பிரிட் படத்திற்கு இத்தனை கோடி சம்பளமாம்.