கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.. விஜய் ஆண்டனி மேடையில் உருக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர்.
பிச்சைக்காரன் படம் அவர் கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால் அவரால் சமீபகாலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. அதற்காக தீவிர முயற்சியில் இருக்கிறார் அவர்.
அடுத்து அவர் நடிப்பில் மார்கன் என்ற படம் திரைக்கு வருகிறது. ஜூன் 27ம் தேதி அந்த பட ரிலீஸ் ஆகிறது.
வட்டி கட்டுகிறேன்
அந்த படத்தின் விழாவில் பேசிய விஜய் ஆண்டனி தான் அடுத்தடுத்து பல படங்கள் இயக்கி வருவதாகவும், கடன் வாங்கி தான் அதை செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
அதற்காக வட்டி கட்டி வருவதாகவும் அவர் உருக்கமாக கூறி இருக்கிறார்.