‘நரி வேட்டை’ திரை விமர்சனம் | ‘Nari Vetta’ movie review in Tamil

‘நரி வேட்டை’ திரை விமர்சனம் | ‘Nari Vetta’ movie review in Tamil



சென்னை,

சிறிய வயதிலேயே தந்தையை இழந்த டோவினோ தாமஸ், தாயின் அரவணைப்பில் வளர்கிறார். அதேவேளை வங்கி ஊழியரான பிரியம்வதாவை காதலிக்கிறார். தாயின் வேண்டுகோளை ஏற்று போலீஸ்காரராக பணிக்கு சேருகிறார். இதற்கிடையில் கேரளா மாநிலம் வயநாட்டில், மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த, அதை கட்டுப்படுத்த சேரன் தலைமையிலான போலீஸ் படையை அரசு அனுப்புகிறது.

போராட்டத்தின் போது போலீஸ்காரர் சுராஜ் கொலை செய்யப்படுகிறார். இதனால் கலவரம் வெடிக்கிறது. இதையடுத்து டோவினோ தாமஸ் மாயமாகி போக, அவரை போலீசார் தேடுகிறார்கள். டோவினோ தாமஸ் கிடைத்தாரா? சூரஜ் மரணத்துக்கு என்ன காரணம்? போராட்டத்தின் பின்னணி என்ன? முடிவில் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

கோபம் கலந்த வாலிபர், பொறுப்பான காவலர் என 2 விதமான நடிப்பில் அசத்தியுள்ளார், டோவினோ தாமஸ். ஹீரோயிசத்தை மறந்து, கதைக்காக வாழ்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சேரன் கைதேர்ந்த நடிப்பை காட்டி மிரட்டியுள்ளார். அவரது குரூர எண்ணம் பயமுறுத்துகிறது.

பிரியம்வதாவின் அழகான நடிப்பும், போலீஸ்காரராக வரும் சுராஜின் இயல்பான நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ், நந்து, கதி கேலிகட், அப்புன்னி சசி, தொம்மன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவில் காட்டின் அழகு அப்பட்டமாய் படமாக்கப்பட்டு உள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துடன் பயணிக்க வைக்கிறது.

லாஜிக் மீறல் காட்சிகள் இருந்தாலும், பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இக்கதையில், தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பதை ஆணித்தனமாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் அனுராஜ் மனோகர்.

நரிவேட்டை – நீதி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *