பழைய வீடியோவால் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சோனு சூட்.. போலீஸ் தீவிர விசாரணை

நடிகர் சோனு சூட் தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் ஆனவர். பல வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படத்தில் அவர் வில்லனாக நடித்து இருந்தார்.
அந்த படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ – போலீஸ் விசாரணை
நடிகர் சோனு சூட் படத்தில் தான் வில்லன், ஆனால் நிஜத்தில் பல நல்ல விஷயங்கள் செய்து வருகிறார். தேவை இருக்கும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.
சமீபத்தில் சோனு சூட் மனைவி விபத்தில் சிக்கி இருந்த நிலையில் அவர் road safety பற்றி எல்லோருக்கும் அட்வைஸ் கூறி இருந்தார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் spiti Valley என்ற இடத்தில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிச்சென்ற பழைய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
அதற்காக நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வரும் நிலையில் அவர் மீதுநடவடிக்கை எடுக்க போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.