நான் ஐஸ்வர்யா ராயை பார்த்து வளர்ந்தவள் – ஆலியா பட்

நான் ஐஸ்வர்யா ராயை பார்த்து வளர்ந்தவள் – ஆலியா பட்


மும்பை,

78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பிரலங்களான ஐஸ்வர்யா ராய், ஜான்வி கபூர், ஆலியா பட், ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது குறித்தும், நடிகை ஐஸ்வர்யா ராயை குறித்தும் பேசியுள்ளார். அதாவது, “இப்போதெல்லாம் நாம் அனைவரும் பிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதை செல்போனில் பார்க்கிறோம். நான் இதேபோல் ஐஸ்வர்யா ராய் நடந்து வருவதை பார்த்து வளர்ந்தவள். அவர் அழகுடன் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்துவது உத்வேகமாக இருக்கும். நானும் அதே போல் இருப்பது மகிழ்ச்சி” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *