ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் கமல்ஹாசனின் தக் லைப் படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம்

தக் லைப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன் என முன்னணி பிரபலங்கள் நடிக்க வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் தக் லைப்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் எல்லா மொழிகளிலும் படத்திற்கான புரொமோஷன் வேகமாக நடந்து வருகிறது.
படு மாஸா இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிய நேற்று (மே 25) விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சியில் கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள்.
புக்கிங்
படமும் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது, விரைவில் படத்தை மக்களும் கொண்டாட உள்ளனர். இன்னொரு பக்கம் படு சூடாக புரொமோஷன் வேலைகள் நடக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓவர்சீஸ் புக்கிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 20 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளதாம்.