’கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது எளிதல்ல…பெண்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளுங்கள்’ – பூமி பட்னேகர்|’It’s not easy to act in erotic scenes…understand women’s emotions’

சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூமி பட்னேகர். இந்தியில் ‘தும் லகா கே ஹைஷா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியாக நடிப்பது பற்றி பூமி பட்னேகர் பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘நடிகைகள் அவ்வளவு எளிதில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டார்கள். அதை செய்யும் நடிகைகளை கொண்டாட வேண்டாம், விமர்சிக்காமல் இருக்கலாமே. நடிகை என்றால் அப்படி நடித்துதான் ஆக வேண்டும் என்று பேசுவதுதான் வேதனை.
கவர்ச்சி காட்டும் பெண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் நடிகைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ என்றார்.