பவன் கல்யாணின் “ஹரி ஹர வீரமல்லு” 4வது பாடல் அப்டேட்|Time locked for Taara Taara from Hari Hara Veera Mallu

சென்னை,
“ஹரி ஹர வீரமல்லு” படத்தின் 4-வது பாடல் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் தற்போது ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீரவாணி இசை அமைத்திருக்கும் இப்படம் ஜூன் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானநிலையில், தற்போது 4-வது பாடலுக்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘தாரா தாரா’ என தொடங்கும் இப்பாடல் வரும் 28ம் தேதி காலை 10.20 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.