சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த வெண்ணிற ஆடை மூர்த்தி

சென்னை,
1965-ம் ஆண்டில் வெளியான வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் என்ற அறிமுகமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் விஜய், அஜித் வரை நடித்துள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி. கண்களை உருட்டிக் கொண்டு மாறுபட்ட சத்தத்துடன் அவரது நகைச்சுவை காட்சிகள் மீண்டும் ரசிக்க வைக்கிறது. இவர் 620 படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்கள் பல இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை திரையுலகில் வைத்திருந்தார். வடிவேலு உடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றும் நினைத்தாலே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவுக்கு வந்து தற்போது 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இது பற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி “1965-ம் ஆண்டில் வெளியான வெண்ணிற ஆடை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன் . கடந்த 2018-ம் ஆண்டு இட்லி என்ற படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 620 படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது சினிமாவில் 60-வது ஆண்டு. மன நிறைவாக இருக்கிறேன். என்னை வாழ வைத்த ரசிகர்கள் மற்றும் சினிமாக்காரர்களுக்கு நன்றி” என்று கூறினார்.