இந்தாண்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Top Cooku Dupe Cooku நிகழ்ச்சி இருக்கா?.. வெளியான தகவல்

இந்தாண்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Top Cooku Dupe Cooku நிகழ்ச்சி இருக்கா?.. வெளியான தகவல்


Top Cooku Dupe Cooku

சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் துவங்கிய நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக். குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்படி விஜய் டிவியில் ஹிட்டானதோ, அதே போன்ற வடிவமைப்பில் உருவாகிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை இயக்கி வந்த மீடியா மேசன்ஸ் டீம், அங்கிருந்து வெளியேறிய நிலையில், சன் டிவியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் களமிறங்கினார். மேலும் அதிர்ச்சி அருண், மோனிஷா, ஜி.பி. முத்து, தீபா, பரத், தீனா ஆகியோர் டூப் குக் ஆக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை ஒரு கலக்கு கலக்கினர். இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்தாண்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Top Cooku Dupe Cooku நிகழ்ச்சி இருக்கா?.. வெளியான தகவல் | Details About Top Cooku Dupe Cooku Show

நிகழ்ச்சி இருக்கா?

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்னும் தொடங்காததால் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழ, தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது.

அதாவது, ‘நானும் ரௌடிதான்’ நிகழ்ச்சி முடிந்த பின் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி தொடங்கும் என்றும், ஆனால் சற்று தாமதமாக தொடங்கும், இருப்பினும் முதல் சீசனை விடவும் தரமாவே வரும். என்ற தகவல் கிடைத்துள்ளது.   

இந்தாண்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Top Cooku Dupe Cooku நிகழ்ச்சி இருக்கா?.. வெளியான தகவல் | Details About Top Cooku Dupe Cooku Show


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *