’குட் பேட் அக்லி’ பட நடிகரின் சகோதரர் மரணம்…திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி|Actor Mukul Dev dies at 54, film fraternity pays tribute

சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ். இவர் தமிழில் அஜித்துடன் ‘வேதாளம்’ , ‘குட் பேட் அக்லி’உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது சகோதரர் முகுல் தேவ் (54). இவர் இந்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முகுல் தேவ் உயிரிழந்தார். இவரது மறைவு திரைப்பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் பிறந்த முகுல் தேவ், 1996-ம் ஆண்டு வெளியான ‘தஸ்தக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘கிலா’ (1998), ‘வஜூத்’ (1998), ‘கோஹ்ராம்’ (1999) மற்றும் ‘முஜே மேரி பிவி சே பச்சாவ்’ (2001), சன் ஆப் சர்தார் (2012) மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘யம்லா பக்லா தீவானா’ படத்தில் நடித்ததற்காக, முகுல் தேவுக்கு 7வது அம்ரிஷ் பூரி விருது வழங்கப்பட்டது.