மீனாட்சி சவுத்ரியின் அடுத்த தமிழ் படம்…நடிகர் இவரா ?|Meenakshi Chaudhary finally signs Tamil star’s next?

சென்னை,
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. கடைசியாக துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’ மற்றும் வெங்கடேஷுடன் ‘சங்கராந்திகி வஸ்துனம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த இவர், தற்போது நாக சைதன்யாவின் என்.சி 24 மற்றும் நவீன் பாலிஷெட்டியின் ‘அனகனகா ஓக ராஜு’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
தமிழில் இவர், ‘கொலை’, ‘சிங்கபூர் சலூன்’ மற்றும் ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவரது அடுத்த தமிழ் படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, விக்ரமின் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தை ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ பட புகழ் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.