"அந்த காட்சிக்காக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தை 5 முறை பார்த்தேன்" – சிம்பு

"அந்த காட்சிக்காக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தை 5 முறை பார்த்தேன்" – சிம்பு


சென்னை,

 ‘தக் லைப்’ படத்தின் புரமோசனில் பேசிய நடிகர் சிம்பு, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை 5 முறை பார்த்ததாக கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படம் வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் நடிகர் சிம்பு, ‘தக் லைப்’ படத்தின் புரமோசனின்போது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை 5 முறை பார்த்ததாக கூறினார். அவர் கூறுகையில்,

“இப்போதெல்லாம் படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பகிர்ந்து விடுகிறார்கள். அப்போதெல்லாம் அந்த வசதி கிடையாது.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் கடைசியாக வரும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே, அந்தப் படத்தை 4 முதல் 5 முறை பார்த்தேன்” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *