சூர்யா செய்த விஷயம்.. நெகிழ்ச்சியான டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்

புதிதாக ரிலீஸ் ஆகும் ஒரு படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆனால், அதன் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டுவதை பல முன்னணி நடிகர்கள் செய்கின்றனர்.
ரஜினி, விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை இப்படி செய்கின்றனர்.
டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்
இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா.
“சூர்யா சார் என் பெயரை அழைத்து, டூரிஸ்ட் பேமிலி படம் எவ்வளவு பிடித்தது என கூறினார். எனக்குள் இருக்கும் ஒரு பையன் வாரணம் ஆயிரம் படத்தை 100 முறைக்கும் மேல் தற்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் இன்று நன்றியுடன் கண்ணீர் விடுகிறான்” என அபிஷன் ஜீவிந்த் பதிவிட்டு இருக்கிறார்.