24 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பிய கமல்ஹாசன் பட நடிகை|Kamal Haasan’s actress returns to Tamil cinema after 24 years

சென்னை,
விஜய் ஆண்டனியின் புதிய படமான ‘லாயர்’ மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.
அர்ஜுனின் ‘சாது’ (1994) மற்றும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான் (2001) ஆகிய படங்களில் நடித்திருந்த ரவீனா தாண்டனுக்கு இது மூன்றாவது தமிழ் படமாகும்
இப்படத்தின் இயக்குனர் ஜோசுவா சேதுராமன் அவர் நடிப்பது குறித்து கூறுகையில், “ஷூல் (1999) படத்தில் ரவீனா மேடமின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கு அவரை போன்ற ஒரு நடிகை எங்களுக்குத் தேவைப்பட்டார். இந்தப் படத்தில் அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் சமமான கதாபாத்திரம் இருக்கும்’ என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.