நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் – ஆர்த்தி ரவிக்கு பாடகி கெனிஷா பதில் | I am a girl from a very good family

நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் – ஆர்த்தி ரவிக்கு பாடகி கெனிஷா பதில் | I am a girl from a very good family


நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நடிகர் ரவிமோகன் பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி என இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகள் உடன் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆர்த்தியின் அறிக்கையில் ‘நானும் சட்டமும் முடிவு செய்யும் வரை நான் ஆர்த்தி ரவிதான். வழக்கு முடியும் வரை மீடியாக்கள் என்னை ‘முன்னாள் மனைவி’ என அழைக்க வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் ரவிமோகனுடனான பிரிவுக்கு 3வது நபரே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ரவி தன்னை பிரிய மூன்றாவது ஒரு நபர் தான் காரணம் என ஆர்த்தி பதிவிட்ட நிலையில், அதற்கு கெனிஷா பதில் அளித்து இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டிருக்கிறார். அதில் ‘நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். நடந்ததற்கு நான் தான் காரணம் என உறுதியாக இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்பினால், தயவுசெய்து அதை நிறுத்துங்க. நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.

நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்டுகள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா. கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை. இவ்வாறு கெனிஷா பதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கடவுளிடம் தான் சரணடைவதாக அவர் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *