வைரலாகும் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு!

சென்னை,
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். அதைபோல ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கும் தன் இரு மகன்களுக்கும் ரவியிடம் இருந்து மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செய்திகள் வருகின்றன” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.