விஷால் – தன்ஷிகா காதல் மலர அந்த ஒரு சம்பவம்தான் காரணமா? | Was that one incident the reason for Vishal

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். அதே சமயம் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டோம் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகி டா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா காதலித்து வருவதாகவும், வருகிற ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடித்தது இல்லை. இவர்களுக்குள் காதல் மலர்ந்து எப்படி? என்று ரசிர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இவர்களுக்கிடையே காதல் மலர அந்த ஒரு சம்பவம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது, 2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த ‘விழித்திரு’ படவிழாவில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய தன்ஷிகா டி.ஆர் பெயரை மறந்து போய், அவரை குறிப்பிடாமல் பேசியுள்ளார். இதனால் டி.ராஜேந்தர் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே திட்டினார். பின் தன்ஷிகா மன்னிப்பு கேட்டு அவர் ஏற்கவில்லை, இந்த விவகாரம் சினிமா வட்டராத்தில் பெரிதானது.
அந்த சமயத்தில் தன்ஷிகாவுக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் குரல்கள் கொடுத்தனர். அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அன்று முதல் அவர்களுக்குள் நட்பு தொடங்கியது. பின்னர் ஒரு சில மாதங்களில் நட்பு காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.