கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

 சந்தானம்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் மே 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில் | Santhanam Reply To Actress Statement

அதிரடி பதில் 

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தேவயானி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவரது கணவரை மோசமாக சந்தானம் கலாய்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்று பேசி இருப்பார்.

தற்போது, இதற்கு சந்தானம் பதில் அளித்துள்ளார். அதில், ” அந்தப் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும்போதே,  இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் தான் என்று தெரிவித்தோம்.

முதலில் நாங்கள் ஸ்க்ரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேயா என்று கேட்டுவிட்டுத்தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.    

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில் | Santhanam Reply To Actress Statement

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *