மீண்டும் விஜய் டிவி சீரியலில் கமிட்டாகியுள்ள முத்தழகு சீரியல் புகழ் ஷோபனா… நாயகன் இவர்தான்

முத்தழகு
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் நிறைய சீரியல்கள் முடிவுக்கு வந்தது, அதில் ஒன்று தான் முத்தழகு சீரியல்.
ஆஷிஷ் சக்கரவர்த்தி மற்றும் ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியல் கிராமத்து கதைக்களத்தை பின்னணியில் கொண்டது.
முத்தழகு சீரியலை கதை இல்லாமல் நடுவில் இழு இழு என இழுத்த எபிசோடுகள் எல்லாம் நிறைய உள்ளது.
ஷோபனா
இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ஷோபனா விஜய் டிவியிலேயே புதிய தொடர் கமிட்டாகியுள்ளார். மோதலும் காதலும் சீரியல் நடிகர் சமீர் நாயகனாக நடித்த ஷோபனா நாயகியாக கமிட்டாகியுள்ளார்.
தொடருக்கு பூங்காற்று திரும்புமா என பெயர் வைத்துள்ளனர்.