ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

குட் பேட் அக்லி
நடிகர் அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி என்ற ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் வெளியான இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.