“ரோலக்ஸ்” அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்|Lokesh Kanagaraj gives a “Rolex” update

“ரோலக்ஸ்” அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்|Lokesh Kanagaraj gives a “Rolex” update


சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரெட்ரோ’. நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்பட ரிலீசையொட்டி சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டத்து. இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கைதி 2, ரோலக்ஸ் குறித்து அட்டகாசமான அப்டேட் கொடுத்தார்.

அவர் கூறுகையில், ‘ரோலக்ஸ் எப்போது வரும் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. என்னுடைய கமிட்மெண்ட் இருக்கிறது. சூர்யாவோட கமிட்மெண்ட் இருக்கிறது. அடுத்து உடனடியாக ‘கைதி 2’ இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக ‘ரோலக்ஸ்’ பண்ணிதான் ஆகனும்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *