நான் எந்த ‘ஷிப்’பிலும் இல்லை – கயாடு லோஹர், I am not in any ‘ship’

நான் எந்த ‘ஷிப்’பிலும் இல்லை – கயாடு லோஹர், I am not in any ‘ship’


பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர், அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கயாடு லோஹர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். குறிப்பாக கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டால் உடனடியாக ஓ.கே. சொல்லி விடுகிறாராம்.

இதுகுறித்து கயாடு லோஹர் கூறும்போது, “எனது முதல் படத்தை வெற்றிகரமாக மாற்றியதில் இளைஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தான் இளம் தலைமுறையினரின் விழாக்களில் ஆர்வமாக பங்கெடுத்து வருகிறேன்.

இந்த தலைமுறையினர் புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்து ‘ஷிப்’ என்றால் கப்பல்தான். ஆனால் இப்போது ‘ரிலேஷன்ஷிப்’, ‘சிச்சுவேஷன்ஷிப்’ என்று ஏராளமான ‘ஷிப்’கள் வந்துவிட்டன. நான் எந்த ‘ஷிப்’பிலும் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. அவ்வளவு எளிதாக எந்த விஷயத்திலும் மாட்டிக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *