"நீ சிங்கம் தான்"..பகிர்ந்த கோலி…நெகிழ்ந்த சிம்பு

சென்னை,
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தற்போது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” என்ற பாடலை கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதனை பார்த்த நடிகர் சிலம்பரசன் அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான்.. என்று நெகிழ்ந்து பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பத்து தல. இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். நீ சிங்கம் தான் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருந்தார். நடிகர் சிலம்பரசன் தற்போது கமலுடன் இணைந்து தக் லைப் படத்தின் புரோமோஷனில் பிசியாக உள்ளார். இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கிறார்.