இறுதிக்கட்டத்தை நெருங்கிய "ஜன நாயகன்" படப்பிடிப்பு

இறுதிக்கட்டத்தை நெருங்கிய  "ஜன நாயகன்" படப்பிடிப்பு


சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

நடிகர் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026ல் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90% நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகின்ற மே மாதம் 2ம் தேதி கொடைக்கானலில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *