‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவால் ஓடவில்லை – அப்பா கங்கை அமரனுக்கு பிரேம்ஜி பதிலடி | ‘Good Bad Ugly’ movie didn’t do well due to Ilayaraja

சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கை அமரன், தங்கள் பாடல்தான் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஜெயிக்க வைத்ததாக கூறினார். அதாவது, ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடலுக்கு கைத்தட்டல் விழாமல் எங்கள் பாடலுக்கு விழுகிறது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்றதால் இப்படம் வெற்றிப் படமாக மாறியது என கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி பதிலளித்துள்ளார். அதாவது, ”எனது அப்பா பேசியது, அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்ற போது அவரது அண்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதேபோல நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் பேசுவேன் அல்லவா. இளையராஜாவால்தான் படம் ஓடியது என அவர் சொன்னதாக கேட்கிறீர்கள். அதெல்லாம் சும்மா. உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு அஜித் தான் முழு காரணம். அதுதான் நிஜம்” என்று தெரிவித்துள்ளார்.