பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் அப்டேட்

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘என்டிஆர்31’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை நந்தமுரி தரகா இராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, நாளை மதியம் 12.06 மணியளவில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.