நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்


குண்டூர்,

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த சமந்தா, பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். சமீப காலமாக, அவரது உடல்நிலை பிரச்சனைக்குரியதாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உடல்நிலை தேறிய நிலையில், மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் மார்பளவு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார். அந்த கோவிலுக்கு ‘சமந்தா கோவில்’ என்ற பெயர் வைத்துள்ளார். தினமும் பூஜை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த கோவிலுக்கு வருகை தருவதாக தெரிகிறது.

கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா உள்ளிட்டவர்களுக்கு ஏற்கனவே கோவில் கட்டிய நிலையில், தற்போது சமந்தாவிற்கும் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *