Black Bag திரை விமர்சனம்

Black Bag திரை விமர்சனம்

ஸ்டீவன் சோடென்பெர்க் இயக்கத்தில் மைக்கேல் ஃபாஸ்பெண்டர், டாம் பர்கே நடிப்பில் வெளியாகியுள்ள ‘Black Bag’.

இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.



கதைக்களம்



பிரிட்ஷ் இன்டெலிஜென்ஸ் ஆபிசர் ஜார்ஜூக்கு அவரது உயரதிகாரி மீச்சம், “சர்வரஸ்” என்ற டாப் சீக்ரெட் சாப்ட்வேர் குறித்த தகவல் கசிந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என ஆணையிடுகிறார்.

Black Bag திரை விமர்சனம் | Black Bag Movie Review


ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிப்பதாக ஜார்ஜ் கூற, அவருடன் பணியாற்றும் ஜார்ஜ் மனைவி கேத்ரின் உட்பட 5 பேர் சந்தேக வளையத்தில் இருப்பதாக மீச்சம் அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பின்னர் சக ஊழியர்கள் 4 பேரையும் இரவு விருந்து அழைக்கும் ஜார்ஜ், அவர்களுடன் தாங்கள் செய்த ஆப்ரேஷன்கள் குறித்து உரையாடுகிறார்.

உணவில் போதைப்பொருளை கலந்து வைத்திருப்பதால் யாராவது உண்மையை உளறிவிடுவார்கள் என ஜார்ஜ் எதிர்பார்க்கிறார்.

ஆனால், ஃப்ரெடி காதலி கிளாரிசாவை ஏமாற்றுவதாக கூறிவிடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ஃப்ரெடியின் கையில் கத்தியை வைத்து குத்திவிட, ஜார்ஜின் குற்றவாளியை கண்டுபிடிக்கும் திட்டம் தோல்வியில் முடிகிறது.

அதே சமயம் மீச்சம் மது அருந்திக் கொண்டிருக்கும்போது சந்தேகத்திற்கிடமாக மாரடைப்பால் இறக்கிறார்.



பின்னர் மனைவியின் நடவடிக்கைகள் ஜார்ஜுக்கு சந்தேகத்தை அவரையும் கண்காணிக்கிறார். கடைசியில் 5 பேரில் யார் குற்றவாளி என்பதை ஜார்ஜ் எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.


படம் பற்றிய அலசல்



ஓஷன்ஸ் லெவன் சீரிஸ் படங்களை இயக்கிய ஸ்டீவன் சோடென்பர்க் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்லோ பர்ன்னிங் திரில்லர் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் வசனங்களிலேயே நகர்கிறது.


ஜார்ஜ் ஆக நடித்திருக்கும் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பதை தந்திருக்கிறார். மனைவி மீது சந்தேகப்படும் காட்சிகளிலும், பியர்ஸ் பிரஸ்னன் மீட்டிங்கில் கூனி குறுகும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


உண்மையை கண்டறியும் சோதனையில் ஃப்ரெடி கத்திக்குத்து வாங்கியதை யதார்த்தமாக கூறும்போது, சீரியஸான அந்த காட்சியில் நாம் சிரிக்கிறோம். அதுதான் சோடென்பெர்க்கின் ஸ்டேஜிங்.



படம் முழுக்க இன்டெராகேஷன் மோடில் செல்வதால் சற்று அயற்சியை தருகிறது திரைக்கதை.

எனினும் கிளைமேக்சில் அதேபோன்ற உரையாடல் சீட் நுனியில் உட்கார வைக்கிறது. ஆக்ஷனுக்கான ஸ்கோப் இருந்தும், அதற்கான நடிகர்கள் இருந்தும் இயக்குநர் ஏன் விசாரணையாகவே கதையை நகர்த்தினார் என தெரியவில்லை.



இருந்தாலும் ஒரு முக்கிய கதாபாத்திரம்தான் குற்றவாளியாக இருப்பார் என நம்மை நம்பவைத்து, இறுதியில் ட்விஸ்ட் கொடுத்து நமது யூகங்களை தூளாக நொறுக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் சோடென்பர்க்.



க்ளாப்ஸ்



சந்தேகப்பார்வையில் நகரும் காட்சிகள்

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்



பல்ப்ஸ்



வசனங்களிலேயே நகரும்படியான திரைக்கதையை சற்று மாற்றியிருக்கலாம்.



மொத்தத்தில் ஸ்லோ பர்ன்னிங் த்ரில்லர் ரசிகர்களுக்கு டீசண்டான வாட்ச்தான் இந்த Black Bag.


ரேட்டிங்: 2.75/5 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *