ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!

ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!


சொந்தத் தொழில் செய்பவர்களைத் தவிர்த்து இந்தியாவில் தனிநபர் வருமான வரி செலுத்துவோர்களில் முன்னணி இடங்களைப் பிடிப்பது சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அந்த வகையில், இந்தாண்டு திரைத்துறையே ஆச்சரியப்படும் அளவிற்கு ரூ. 120 கோடி வரை வருமான வரியாக செலுத்தியுள்ளாராம் நடிகர் அமிதாப் பச்சன்.

2024 – 2025 ஆம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப் பச்சன் ரூ. 350 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற ரூ. 92 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும், கடந்தாண்டு வெளியான, ‘கல்கி ஏடி’ திரைப்படத்திலும் நல்ல சம்பளம் பெற்றிருக்கிறார். மேலும் பிற திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதால் இவ்வளவு பெரிய ஆண்டு வருமானத்தை சாத்தியப்படுத்தியுள்ளார் அமிதாப் பச்சன்.

ஆண்டுதோறும் அதிக வருமான வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கானே (ரூ. 90 கோடி வரை) முதலிடம் பிடிப்பார். ஆனால், இந்த முறை நடிகர் அமிதாப் பச்சன் மிகப்பெரிய தொகையை வரியாக செலுத்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *