இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை, பிரதர்’ ஆகிய படங்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து ‘கராத்தே பாபு, ஜீனி, பராசக்தி’ ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில், ரவிமோகன் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ரவிமோகன் இந்த புதிய படத்தை தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை ஒரு நகைச்சுவையான பேமிலி என்டர்டெயினர் படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *