தற்காப்பு கலை கற்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ|Vijay Sethupathi learns martial arts

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி தற்காப்பு கலை கற்றுக்கொண்டுள்ளார். கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு கலையை விஜய் சேதுபதி கற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.