ரசிகருக்கு கேக் ஊட்டிய ஜான்வி கபூர்

சென்னை,
மறைந்த நடிகை தேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் `தடக்’ படம் மூலம் அறிமுகமாகி `கோஸ்ட் ஸ்டோரீஸ்’, `ரூஹி’, `குட்லக் ஜெர்ரி’, `மிலி’ , `மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ்’ என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ‘தேவரா’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனைத்தொடர்து ஜான்வி கபூர் தற்போது ராம் சரணின் 16-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்தசூழலில், நேற்று நடிகை ஜான்வி கபூர் தனது 29-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது ரசிகர் கொடுத்த கேக்கை வெட்டி அந்த ரசிகருக்கே ஜான்வி ஊட்டி விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.