சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா? அவரே கூறிய காரணம்

சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா? அவரே கூறிய காரணம்


அமிதாப் பச்சன் 

பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை சினிமாவில் தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழில் இவர் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா? அவரே கூறிய காரணம் | Actor Quit Cinema

சமீபத்தில் அமிதாப் அவரது எக்ஸ் தளத்தில் ‘செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று பதிவிட்டிருந்தார். அதை கண்டு ரசிகர்கள் அமிதாப் சினிமாவை விட்டு விலக போவதை தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று கூறி பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விலகுகிறாரா?

இந்நிலையில், தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமிதாப்.

சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா? அவரே கூறிய காரணம் | Actor Quit Cinema

அதில், “நான் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பதிவிட்டதில் என்ன தவறு இருக்கிறது. நான் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்ற அர்த்தத்தில் தான் பதிவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதை கேட்டு தற்போது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.      


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *