விவாகரத்தை அறிவித்த ’வாரிசு’ பட நடிகை|’Varisu’ actress announces divorce

விவாகரத்தை அறிவித்த ’வாரிசு’ பட நடிகை|’Varisu’ actress announces divorce


சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சம்யுக்தா. இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து காபி வித் காதல், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனிடையே, இவர் தொழிலதிபர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ராயன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

“விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். முன்பைவிட இப்போது நான் வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *