'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளரின் அடுத்த படம்

'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளரின் அடுத்த படம்


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘காதலை தேடி நித்யானந்தா, ‘வெர்ஜின் மாப்பிள்ளை’, ‘பஹீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் கடந்த 2023-ம்�ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் வினோத் தயாரித்திருந்தார் . தற்போது அவர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குனர் சரன்ங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *