’இதனால் போலியான பெயரில் சுற்றினேன்’ -ஸ்ருதிஹாசன்|’This is why I went around under a fake name’

சென்னை,
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, ‘நான் கமல்ஹாசனின் வாரிசு என்பதால் பொதுவெளியில் என்னை பற்றி தெரிந்தால் அது சுதந்திரமாக சுற்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதனால், நான் படங்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பு தனக்கென ஒரு போலியான பெயரை உருவாக்கி அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் வெளியே சுற்றினேன்’ என்று கூறுனார்.
மேலும், இதனால் தன்னைப் பற்றி தெரியாதவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி விரும்பியபடி பேச முடிந்தது என்றும், ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க துவங்கிய பின்பு இந்த பொய்யான பெயர் எடுபடவில்லை என்றும் கூறினார்.