’அதில் பிருத்விராஜுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும்’ – மஞ்சுவாரியர்|’Prithviraj will have an important place in it’

’அதில் பிருத்விராஜுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும்’ – மஞ்சுவாரியர்|’Prithviraj will have an important place in it’


சென்னை,

பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திர அறிமுகங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு அரசியல்வாதியின் மகளாக பிரியதர்ஷினி ராமதாஸ் என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சு வாரியர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் தொடர்கிறார். இந்த நிலையில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய திரையுலக பயணத்தில் இந்த லூசிபர் திரைப்படமும் பிரியதர்ஷினி ராமதாஸ் என்கிற கதாபாத்திரமும் ரொம்பவே மறக்க முடியாதவை. ஒரு இயக்குனராக பிருத்விராஜை பொறுத்தவரை தனக்கு என்ன தேவை என்று தெரிந்து வைத்திருப்பதைப் போல தனக்கு என்ன தேவை இல்லை என்பது குறித்தும் தெளிவாகவே இருக்கிறார். அதனால் படப்பிடிப்பில் நடிகர்களை அவர் எளிதாக கையாள முடிகிறது. நிச்சயமாக எனக்கு பிடித்த பேவரைட் இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் பிருத்விராஜுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *