’முதல் படமே தனுஷ் இயக்கத்தில் இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை – ரம்யா ரங்கநாதன்|Never in my wildest dreams did I imagine that my very first film would be under your guidance

’முதல் படமே தனுஷ் இயக்கத்தில் இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை – ரம்யா ரங்கநாதன்|Never in my wildest dreams did I imagine that my very first film would be under your guidance


சென்னை,

தனுஷ் இயக்கத்தில் கடந்த 21-ம் தேதி வெளியான் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் ரம்யா ரங்கநாதன் , தனுஷுக்கு நன்றி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நான் நன்றியுடன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் இதை பகிர்ந்துள்ளேன். என்னுடைய முதல் பட வாய்ப்பளித்த தனுஷுக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி. உங்கள் இயக்கத்தில் நடித்தது உண்மையிலேயே பெருமையாக உள்ளது. என்னுடைய முதல் படமே உங்கள் இயக்கத்தில் இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.

உங்களுடன் எடுத்த முதல் புகைப்படம் என்றும் என் மனதில் தனி இடத்தைப் பிடித்திருக்கும். “கோல்டன் ஸ்பேரோ” படப்பிடிப்பிற்கு பிறகு நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் என்றென்றும் என்னுடன் இருக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *