பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி – இந்தியாவுக்கு வாழ்த்து கூறிய சினிமா நட்சத்திரங்கள்|Cinema stars congratulate India on victory over Pakistan

மும்பை,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடின.
பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து கூறியுள்ளனர். அதன்படி, ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, சமந்தா, அஜய் தேவ்கன், கரண் ஜோஹர், விவேக் ஓபராய், ஷர்வரி, அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் இந்தியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.