” பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்” – அஸ்வத் மாரிமுத்து |Dragon was more like a sorry to them

” பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்” – அஸ்வத் மாரிமுத்து |Dragon was more like a sorry to them


சென்னை,

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

அதைத் தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். கயடு லோஹர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் கடந்த 21-ம் தேதி வெளியானது. வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது பெற்றோரின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

“நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத எஞ்சினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்’ என்று தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *