VijaySethupathi – NithyaMenen film shooting has been wrapped up | விஜய் சேதுபதி

VijaySethupathi – NithyaMenen film shooting has been wrapped up | விஜய் சேதுபதி


சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே துவங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்தே படம் உருவாகியுள்ளதாம். விஜய் சேதுபதி – இயக்குநர் பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் அவர்கள் ஒரு படத்தில் இணைவது குறித்து நித்யா மேனன் பேசுகையில் “அந்த படத்தில் எங்க இரண்டு பேரோட காம்பினேஷன் காட்சி ரொம்ப சின்னதா இருந்துது. இரண்டு நாட்கள் மட்டுமே அதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போ நாங்க இரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும் என பேசி இருந்தோம். இப்போ நாங்க நடிக்க போற இந்த ஸ்கிரிப்ட்டை விட வேற ஒரு நல்ல ஸ்கிரிப்ட் எங்களுக்கு கிடைச்சு இருக்காது. இந்த படத்தில் நடிப்பதை நான் மிகவும் எக்ஸ்சைடட்டா பீல் பண்றேன். ரொம்பவே தனித்துவமான ஒரு கேரக்டர். வழக்கமா நான் செய்ற ஜானரை காட்டிலும் இது ரொம்பவே வித்தியாசமானது. பல வகையான ஜானர்களில் நடிப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்” என பேசி இருந்தார் நடிகை நித்யா மேனன்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *