Bad Girl படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் செல்வமணி

Bad Girl படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் செல்வமணி


Bad Girl

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வர்ஷா பரத் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் Bad Girl.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ருது ஹாரூன், டீஜே அருணாச்சலம், சஷாங், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைக்க வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளனர்.

பதின்ம வயதில் இருக்கும் ஒரு பள்ளி மாணவிக்கு எதிர்பாலின ஈர்ப்பு ஏற்படுவது முதல் பாலியல் சுதந்திரம் என்பது தன்னை மட்டுமே சார்ந்தது என்று அவர் சொல்வது வரை இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.

Bad Girl படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் செல்வமணி... என்ன சொன்னார் பாருங்க | K Selvamani Open Talk About Bad Girl Movie

இந்த படத்தில பள்ளி மாணவர்களை தவறாக வழி நடத்தும் என்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என காட்டப்பட்டிருப்பதற்கு என படத்தில் இடம்பெற்றுள்ள நிறைய விஷயத்திற்கு எதிர்ப்பு வருகிறது.

ஆர்.கே.செல்வமணி

இந்த படம் குறித்து மூத்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ஒரு திரைப்படத்தை முழுதாகப் பார்க்காமல் அது சரியா தவறா என்று கருத்து கூறுவது அரைவேக்காட்டுத்தனம்.

படத்திற்கு ஸ்பார்க் உருவாக்குவதற்காக கூட டீஸரில் இப்படி சேர்ப்பது வழக்கம். படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும்.

குக்கரில் சாதம் பொங்கும்போது மேலே வரும் அரிசியைப் பார்த்துவிட்டு இது வேகவில்லை என்று சொல்வது சரியாக இருக்காது என கூறியிருக்கிறார். 

Bad Girl படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் செல்வமணி... என்ன சொன்னார் பாருங்க | K Selvamani Open Talk About Bad Girl Movie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *