“Madharasi” film title teaser crosses 20 million views

சென்னை,
இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்கே23’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ‘மதராஸி’ படத்தின் டைட்டில் டீசர் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.