‘புஷ்பா 2’ படத்தில் இந்த காட்சியில் நடிக்க பயந்ததாக கூறும் அல்லு அர்ஜுன்

சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியானது.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1871 கோடி வசூலித்தது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஜாதரா காட்சியில் நடிக்க முதலில் பயந்ததாக அல்லு அர்ஜுன் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இயக்குனர் சுகுமார் ஆரம்பத்தில் ஜாதரா காட்சி பற்றி என்னிடம் சொன்னபோது, நான் மிகவும் பயந்தேன். “நீங்கள் ஒரு புடவை அணிய வேண்டும், ஒரு பெண்ணைப்போல உடை அணிய வேண்டும்” என்றார். முதலில், பயமாக இருந்தது, பின்னர் அதை செய்துவிட்டோம்’ என்றார்.