'ஜான்வி கபூர் திரையில் வரும்போது…வேறு யாரிடமும் அது இல்லை' – பிரபல பாலிவுட் நடிகர்

சென்னை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சி, ஜான்வி கபூரை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஜான்வியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது அம்மாவிடம் இருந்த ஸ்பார்க் தற்போது ஜான்வியிடம் இருக்கிறது. வேறு யாரிடமும் இல்லை.
அவர் திரையில் வரும்போது அது நமக்கு தெரியும். அவரிடமிருந்து நம் கண்களை நகர்த்த முடியாது. அது நடிகையிடம் இருக்க வேண்டிய அற்புதமான விஷயம்’என்றார்.