சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி ட்ரீட்.. பராசக்தி ஷூட்டிங் வீடியோ வைரல்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அதர்வா, ரவி மோகன் (முன்னாள் பெயர் – ஜெயம் ரவி), ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை பராசக்தி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழு உடன் தான் கொண்டாடி இருக்கிறார்.
பிரியாணி பரிமாறிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாள் ட்ரீட் ஆக படக்குழு அனைவர்க்கும் பிரியாணி கொடுத்திருக்கிறார்.
அவர் பிரியாணி பரிமாறும் வீடியோவை சுதா கொங்கராவே வெளியிட்டு இருக்கிறார். இதோ.